close
Choose your channels

முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

Wednesday, December 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அறிமுகமான முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. 

யோகி பாபு நடிப்பில் மடோனா அஸ்வின் என்பவரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’மண்டேலா’. இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படம் பல விருதுகளுக்கும் தகுதி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ’மண்டேலா’ இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரே படத்தில் பிரபலமான இயக்குனரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.