close
Choose your channels

சன்னிலியோன் படத்தின் முழு டைட்டில் அறிவிப்பு

Wednesday, December 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் நடிக்கவுள்ள சரித்திர கதையம்சம் கொண்ட படத்தின் பாதி டைட்டில் 'தேவி' என்று ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முழு டைட்டிலும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் 'வீரமாதேவி' என்றும் இந்த படத்தின் கதை இதுவரை யாரும் சொல்லாத சரித்திர கதை என்றும், இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான படமாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் டைட்டிலை அறிமுகம் செய்து சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், 'வணக்கம், தமிழ் ஆட்களே, நான் வீரமாதேவியாக உங்களை சந்திக்க போறேன்' என்று கூறியுள்ளார்.

ஸ்டீவ்ஸ் கார்னர் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்த படம் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியிலும் தயாராகவுள்ளது. சன்னிலியோனின் முதல் படத்திற்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.