close
Choose your channels

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர் 2'.. உறுதி செய்த அதே படத்தில் நடித்த நடிகை..!

Thursday, February 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படம் உலகம் முழுவதும் 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவ்வபோது செய்திகள் வெளிய வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த படத்தில் நடித்த நடிகையே ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகம் உருவாகுவது உறுதி என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகை மிர்ணா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் நெல்சன் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘ஜெயிலர் 2’ படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். எனவே ‘ஜெயிலர் 2’ படத்தின் பணிகளில் நெல்சன் இருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

'ஜெயிலர்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது போல் 'ஜெயிலர் 2’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எனக்கு தெரியாது, ஆனாலும் அந்த படத்தை நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றும் மிர்ணா தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’வேட்டையன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை முடித்துவிட்டு அவர் 'ஜெயிலர்’ படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.