close
Choose your channels

ரஜினிகாந்த் பயோபிக் படம் உருவாகிறதா? ரஜினி கேரக்டரில் யார் நடிப்பார்?

Wednesday, May 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினி கேரக்டரில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையின் காரணமாக சென்னை வந்து முறைப்படி திரைப்பட கல்லூரியில் படித்து, அதன் பின் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவருக்கு கடந்த 1975 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் பாண்டியன் என்ற ஒரு சின்ன கேரக்டர் கிடைத்தது. கிளைமாக்ஸில் ஒரு 10 நிமிடம் மட்டுமே வரும் இந்த கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்த நிலையில் யார் இந்த ரஜினிகாந்த் என்று அப்போதே ரசிகர்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர்.

அதன் பிறகு சில படங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் ’பைரவி’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் என்றும் என்பதும் அதன் பிறகு ஒரு சில வருடங்களிலேயே அவர் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டார் என்பதும் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதன் குறிப்பிடத்தக்கது.

தற்போது 73 வயதாகும் ரஜினிக்கு இன்னும் வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அதுவும் ஆக்சன் படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திரையுலக பிரபலங்களின் பயோபிக் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக இசைஞானி இளையராஜா பயோபிக் திரைப்படம் குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்தது.

அந்த வகையில் அடுத்ததாக ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படம் உருவாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், ரஜினி கேரக்டரில் சிவக்கார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே ரஜினிகாந்த் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று தனுஷ் தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்த நிலையில் ரஜினியின் பயோபிக்கில் யார் நடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.