close
Choose your channels

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே?

Saturday, April 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜெயிலர்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பது தெரிந்ததே. மேலும் அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ’லால் சலாம்’ என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பதும் அதை அடுத்து ’ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்பது இந்த இரண்டு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'ஜெயிலர்’ ’லால் சலாம்’ மற்றும் ஞானவேல் படங்களை முடித்த பிறகு ரஜினிகாந்த் , லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் இன்னொரு படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ’கேஜிஎப்’ ’காந்தாரா’ படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர், ரஜினிகாந்த் மற்றும் சுதா கொங்காரா ஆகியோர் பெங்களூரில் சந்தித்ததாகவும் அப்போது இந்த படம் உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுதா கொங்கரா இயக்கவிருக்கிறார் என்ற தகவல் அறிந்து ரசிகர்கள் ’இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே’ என கூறி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.