close
Choose your channels

குளிர் காய்ச்சலா? சூரியன் பக்கத்துல வாங்க.. கலைஞர் குறித்து ரஜினிகாந்த் பகிர்ந்த சம்பவம்..!

Sunday, January 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று ’கலைஞர் 100’ என்ற விழா சிறப்பாக நடந்ததை அடுத்து இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய போது குளிர் காய்ச்சலா? சூரியன் அருகே வாருங்கள், சரியாக போய்விடும் என்று கலைஞர் கூறிய சம்பவத்தை ஞாபகப்படுத்தினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

’கலைஞருக்கு நெருக்கமான நடிகர் ஒருவர் அவருடைய படத்தை கலைஞருக்கு போட்டு காட்ட பிரிவியூ ஷோ ஏற்பாடு பண்ணி இருந்தார். அந்த சமயத்தில் தேர்தல் நடந்த நிலையில் வாக்குப்பதிவு நடந்தது. அந்த நடிகர் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த போது யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என பத்திரிகையாளர்கள் கேட்க, அவர் இரட்டை இலைக்கு’ என பதில் அளித்தார். பத்திரிகைகளில் அது மிகப்பெரிய செய்தியாகிவிட்டது.

தற்போது அந்த நடிகருக்கு கலைஞருக்கு ஏற்பாடு செய்திருந்த பிரிவியூ ஷோவுக்கு செல்வதில் சங்கடம் ஏற்பட்டது. அதனால் குளிர் காய்ச்சல் எனக் கூறி பிரிவியூ ஷோவுக்கு செல்லாமல் தவிர்க்க நினைத்தார். ஆனால் கலைஞர் அந்த படத்தை பார்க்க தியேட்டரில் அந்த நடிகருக்காக காத்திருந்தார்.

இதை அறிந்த அந்த நடிகர் வேறு வழியில்லாமல் தியேட்டருக்கு வந்தார். அப்போது ’என்னங்க குளிர் காய்ச்சல்ன்னு சொன்னிங்க, சூரியன் பக்கத்துல உட்காருங்க சரியாகிவிடும்’ என்று சொல்லி கலைஞர் அந்த நடிகரை தனது பக்கத்தில் உட்கார வைத்தார். அந்த நடிகர் வேறு யாருமில்லை, இந்த ரஜினிகாந்த் தான்’ என்று கலைஞரின் சுவாரஸ்யமான நினைவுகளை நேற்றைய விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்து கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.