close
Choose your channels

'பசங்க 2' படத்தில் சூர்யாவின் கேரக்டர்

Thursday, September 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பசங்க' படம் மூலம் அறிமுகமான இயக்குனர் பாண்டியராஜ் இயக்கியுள்ள 'பசங்க 2' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இந்த படத்தில் சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகத்தான் இதுவரை செய்திகள் வெளிவந்துள்ளது.

சிறப்பு தோற்றம் என்றால் 10 அல்லது 15 நிமிடங்கள் வருவது போன்றுதான் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் 'பசங்க 2' படத்தில் சூர்யாவின் காட்சிகள் 40 நிமிடங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது என்றும், அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தெரிய வருகிறது.

பிறக்கும்போதே ஒருசில குறைகளுடன் பிறந்த குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாடன் என்ற கேரக்டரில் சூர்யாயும், வெண்பா என்ற கேரக்டரில் அமலாபாலும் நடித்துள்ள இந்த படத்தில் பிந்துமாதவி, கார்த்திக் குமார், ஆகியோர்களும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.