close
Choose your channels

'சூர்யா 37' டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Wednesday, December 26, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் டைட்டில் குறித்து ரசிகர்களின் கருத்து கேட்கப்பட்டது என்பதும், 'மீட்பான்', 'காப்பான்' மற்றும் 'உயிர்கா' ஆகிய மூன்று டைட்டில்களில் 'உயிர்கா' என்ற டைட்டிலுக்கு பெரும்பாலான ரசிகர்கள் தங்கள் ஆதரவை கொடுத்திருந்தனர் என்பதையும் இன்று காலை பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் கே.வி.ஆனந்த் இந்த படத்தின் டைட்டில் குறித்து டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். டைட்டில் குறித்த ரசிகர்களின் கருத்துக்கு நன்றி என்றும், இந்த படத்தின் சரியான டைட்டிலை வரும் 2019, ஜனவரி 1 அன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளோம் என்றும் கூறியுள்ளார். 'என்.ஜி.கே குறித்து எந்தவித அப்டேட்டும் இல்லாமல் சோர்வில் இருந்த சூர்யாவின் ரசிகர்களுக்கு இந்த தகவல் மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படம் 2019ஆம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்பிற்குரிய படங்களில் ஒன்று ஆகும்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.