close
Choose your channels

'சூர்யா 42' படத்தின் மாஸ் டைட்டில்.. 1 நிமிட அனிமேஷன் வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

Sunday, April 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சூர்யா 42’. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று காலை 9:05க்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் ஒரு நிமிட அனிமேஷன் வீடியோவில் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



ஏற்கனவே நாம் கணித்தபடி இந்த படத்தின் டைட்டில் ’கங்குவா’ என்றுதான் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த டைட்டில் அனிமேஷன் வீடியோ மாஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் 10 மொழிகளில் உருவாகி வரும் நிலையில் அனைத்து மொழிகளுக்கும் பொதுவான டைட்டில் ‘கங்குவா’ தான் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த அனிமேஷன் வீடியோவில் இருந்த இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோவின் இறுதியில் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அநேகமாக அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வரும் இந்த படம் நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.