close
Choose your channels

கிராபிக்ஸ் காட்சிகளின் பிரமாண்டம்.. சூர்யாவின் அசத்தல் கெட்டப்.. 'கங்குவா' டீசர்..!

Tuesday, March 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டீசரின் ஆரம்பக் காட்சியே அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தொடங்குகிறது என்பதும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் கழுகு பார்வையில் மலைகளில் வரிசையாக மக்கள் நடந்து செல்லும் காட்சி, மனித பிணக்குவியல்கள் காட்சி ஆகிய காட்சிகளுடன் ஆரம்பிக்கும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலில் பிரம்மாண்டமான படகுகளின் அணிவகுப்பு, போர் முரசு கொட்டும் காட்சிகள், சூர்யாவின் அட்டகாசமான அறிமுகம் ஆகிய காட்சிகள் டீசரில் பார்க்கும்போது மிரள வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் 51 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரை பார்க்கும்போது ‘கங்குவா’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்று என்பது தெரிய வருகிறது. மொத்தத்தில் சூர்யாவுக்கு ஒரு மறக்க முடியாத படமாக ‘கங்குவா’ இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.