close
Choose your channels

சின்ன வயதில் மகன் செய்த சாதனை.. மகிழ்ச்சியுடன் வாழ்த்திய நடிகர் சூர்யா..!

Sunday, April 21, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யாவின் மகன் தேவ் இந்த சின்ன வயதில் செய்த சாதனையை எடுத்து தனது மகனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

பிரபல நடிகர் சூர்யா கடந்த 2006ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு தியா என்ற மகள் மற்றும் தேவ் என்ற மகன் உள்ளனர் என்பது பலர் அறிந்தது.

சூர்யா தற்போது தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வரும் நிலையில் அவரது குழந்தைகளும் மும்பையில் உள்ள பள்ளிகளில் தான் படித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ் கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தேவ் பிளாக் பெல்ட் வாங்கும் நிகழ்ச்சியில் சூர்யா ஒரு தந்தையாக கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்ததோடு மேடையில் தனது மகனுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி அந்த நிகழ்ச்சியில் பிளாக் பெல்ட் வாங்கிய அனைத்து குழந்தைகளுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்த காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

தேவ் தற்போது 14 வயதில் இருக்கும் நிலையில் இந்த சின்ன வயதில் அவர் பிளாக் பெல்ட் வாங்கியதை அடுத்து அவருக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.