close
Choose your channels

காதலருடன் வெளிநாட்டு பயணமா? தமன்னாவின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்..!

Saturday, August 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இருவரும் வெளிநாட்டுக்கு பயணம் செய்ய விமான நிலையத்திற்கு வந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டாலும் தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக கூறப்பட்டது. இந்த தகவலை அவரே உறுதி செய்த நிலையில் ’லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ படப்பிடிப்பின் போது தான் தங்களுக்குள் காதல் மலர்ந்ததாக தெரிவித்தார்.

அதேபோல் விஜய் வர்மாவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’தற்போது வாழ்க்கையில் மிகவும் அன்பும் காதலும் நிறைந்து இருக்கிறது என்றும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் தமன்னா மற்றும் விஜய் வர்மா ஆகிய இருவரும் வெளிநாட்டுக்கு செல்வதற்கு விமான நிலையத்திற்கு வரும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரொமான்டிக் விடுமுறைக்காக இருவரும் வெளிநாடு செல்வதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.