close
Choose your channels

அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழா.. தமிழ் நடிகைக்கு அழைப்பு..!

Sunday, August 13, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாடு முழுவதும் சுதந்திர தினம் நாளை மறுநாள் சிறப்பாக கொண்டாட இருக்கும் நிலையில் அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ் நடிகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் இந்தியாவில் மட்டுமின்றி உலகில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த நாள் கொண்டாடப்படும் என்பதும் தெரிந்ததே

அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வரும் 20ஆம் தேதி இந்திய சுதந்திர தின கொண்டாட்ட விழா நடைபெற இருப்பதாகவும் அதில் நடிகை சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இது போன்ற விழாவில் நடிகர்கள் அபிஷேக் பச்சன், அல்லு அர்ஜுன் ஆகியோர் கலந்திருந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமந்தா இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்று தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அவர் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது சினிமாவில் இருந்து குறுகிய காலத்திற்கு ஓய்வு எடுத்து வரும் சமந்தா பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.