close
Choose your channels

'காதலர் தின' ஸ்பெஷலாக பூக்களால் மேலாடை அணிந்த தமிழ் நடிகை!

Sunday, February 14, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

காதலர் தினத்தில் கோலிவுட் திரையுலக பிரமுகர்கள் தங்களது காதல் பதிவுகளை பதிவு செய்து வரும் நிலையில் தமிழ்த் திரையின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவரான ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருசில கவர்ச்சி புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ்களும், ஆயிரக்கணக்கான லைக்ஸ்களும் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரை பின்னணியில் பூக்களை மட்டுமே மேலாடையாக கொண்டு அவர் பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்களுக்கு பதிவாகியுள்ள பல்வேறு சுவாரஸ்யமான கமெண்ட்ஸ்கள் இந்த புகைப்படங்களை விட கவர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

கமல்ஹாசனின் ’தசாவதாரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஷாலு ஷம்மு, அதன்பிறகு ’காஞ்சிவரம்’ ’மலையன்’ ‘கண்டேன் காதலை’ ’மாத்தியோசி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பதும், இருப்பினும் கடந்த 5 ஆண்டுகளாக இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.