close
Choose your channels

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்: திரையுலகினர் இரங்கல்..!

Saturday, September 2, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் ஆர்எஸ் சிவாஜி காலமானதையடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்த எம்ஆர் சந்தானம் அவர்களின் மகன் தான் ஆர்.எஸ்.சிவாஜி. அவருடைய சகோதரர் சந்தான பாரதி இயக்குனர் மற்றும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்எஸ் சிவாஜி ’பன்னீர் புஷ்பங்கள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் பல படங்களில் அவர் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக ’பம்மல் கே சம்பந்தம்’ ’அபூர்வ சகோதரர்கள்’ , ‘அன்பே சிவம்’, ’உன்னை போல் ஒருவன்’, உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு குறிப்பிடும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் இயக்கத்தில் உருவான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்து அசத்தியிருப்பார்.


இந்த நிலையில் சற்றுமுன் ஆர்.எஸ்.சிவாஜி காலமானார் என்ற தகவல் திரையுலகினர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவரது வளசரவாக்கம் வீட்டிற்கு திரையுலகினர், பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.