close
Choose your channels

அவர் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை, நானே போயிருவேன்: விஜய் அரசியல் கட்சி குறித்து இயக்குனர்..!

Friday, February 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் இணைவீர்களா என்று பிரபல இயக்குனரிடம் செய்தியாளர்களுக்கு கேட்டபோது ’நல்ல விஷயத்துக்கு அவர் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை, நானே போயிடுவேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு ஏராளமான திரையுலக பிரபலங்கள் ஆதரவு கொடுத்துள்ள நிலையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவருடைய கட்சியில் பல நடிகர் நடிகைகள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் நடிகர் மற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி நேற்று தென்காசியில் உள்ள கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது ’நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு ’நல்ல விஷயம் தான்’ என்று பதில் அளித்த சமுத்திரக்கனி விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் சேருவீர்களா? என்று கேட்டபோது ‘நல்ல விஷயத்துக்கு அவர் அழைக்க வேண்டிய அவசியம் இல்லை, நானே அவருக்கு ஆதரவாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து விஜய் அரசியல் கட்சியில் சமுத்திரக்கனி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.