close
Choose your channels

5வது மாதத்தில் வளைகாப்பு.. கணவருடன் ஜாலியாக ஆட்டம் போட்ட சீரியல் நடிகையின் வீடியோ..!

Wednesday, January 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களை நடித்து வரும் நடிகை ஒருவர் தற்போது ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் வளைகாப்பு தினத்தில் கணவருடன் கைகோர்த்து ஜாலியாக நடனமாடும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் ஆகி வருகிறது

தொலைக்காட்சி தொடர்களான ’ராஜா ராணி’ ’இளவரசி’ ’கஸ்தூரி’ ’தங்கம்’ உள்பட பல சீரியல்களில் நடித்தவர் ஸ்ரீதேவி அசோக். மேலும் இவர் தனுஷ் நடித்த ’புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’ உள்பட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் ஸ்ரீதேவி அசோக் கடந்த 2019ஆம் ஆண்டு அசோக் என்ற போட்டோகிராபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி அசோக் மீண்டும் கர்ப்பமான நிலையில் அவருக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியின்போது ஸ்ரீதேவி அசோக் தனது கணவருடன் கைகோர்த்து டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஐந்தாவது மாத வளைகாப்பு நிகழ்ச்சிகள் மிகவும் சந்தோஷமாக இருந்த தருணங்கள் என்றும் அவர் இந்த வீடியோவுக்கு கேப்ஷனாக பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது..

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.