close
Choose your channels

'தளபதி 64' படத்தின் அட்டகாசமான டைட்டில் இதோ

Tuesday, December 31, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து சமூகவலைதளத்தில் விஜய் ரசிகர்கள் பரபரப்பாக இருந்த நிலையில் தளபதி 64 படத்தின் டைட்டில் வெளியாக இருக்கும் ஒரு சில மணி நேரங்களில் இருந்து இந்த படத்தின் டைட்டில் குறித்த ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’தளபதி 64’ என்று இதுவரை அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின் அட்டகாசமான டைட்டில் ‘மாஸ்டர் ‘ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த டைட்டிலும் தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.