close
Choose your channels

'ஆபாசத்தின் உச்சம்.. இதெல்லாம் ஒரு படமா? வெளுத்து வாங்கிய 'தளபதி 68' பிரபலம்..!

Thursday, December 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 68 ’படத்தின் பிரபலம் ஒருவர் சமீபத்தில் வெளியான ’அனிமல்’ படத்தை பார்த்து இந்த படம் ஆபாசத்தின் உச்சம் என்று கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ’தளபதி 68’ படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த் நுனி, சமீபத்தில் ஹைதராபாத்தில் ’அனிமல்’ திரைப்படத்தை பார்த்ததாகவும் அந்த படத்தை பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளார்.

ராம்கோபால் வர்மா, அனுராக் காஷ்யப் போன்ற பல பிரபலங்கள் ’அனிமல்’ படத்தை பார்த்து பாராட்டிய நிலையில் இவர் ’அனிமல்’ படத்தை கடுமையாக விமர்சித்து உள்ளார். அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

’அனிமல்’ படத்தை பார்த்து எனக்கு எந்த ஒரு இன்ஸ்பிரஷனும் வரவில்லை. அதற்கு பதிலாக நாஜிக்களின் புகழாரம், ஆணாதிக்க மனநிலை ஆகியவை ஆபாசத்தின் உச்சமாக இருக்கிறது. மேலும் கடைசி காட்சியான மனைவியை பலாத்காரம் செய்யும் காட்சி அசிங்கமாக உள்ளது.

இந்த படம் என்னதான் வசூலில் சாதனை செய்தாலும் மிக மோசமான படம். அதுமட்டுமின்றி ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்ட இந்த படத்தை பலர் குழந்தைகளுடன் வந்து பார்க்கின்றனர். அதை பார்க்கும்போது மனது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. எந்த ஒரு சமூக அக்கறையும் இல்லாமல் குழந்தைகளை இந்த படத்தை பார்க்க எப்படி அனுமதிக்கிறார்கள் என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.