close
Choose your channels

'தளபதி 68' பூஜை, படப்பிடிப்பு எப்போது? மாஸ் தகவல்..!

Saturday, September 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன ’தளபதி 68’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

‘தளபதி 68’ படத்தின் பூஜை அக்டோபர் 1ஆம் தேதி சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அனைத்து பாடல்களையும் வெளிநாட்டு லொகேஷனில் படமாக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு ஸ்டைலில், விஜய்யின் இரட்டை வேடங்களில், அதிரடி ஆக்சன் கதையான இந்த படம் சில இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான விஜய் படம் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.