close
Choose your channels

'தளபதி 68' படத்தின் டைட்டில்  'Boss' இல்லை 'Puzzle' இல்லை.. அப்ப இதுவா இருக்குமோ?

Saturday, December 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த நடித்து வரும் 68 வது படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்து வைரல் ஆகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 68’. இந்த படத்தின் டைட்டில் வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ’Boss’ அல்லது ’Puzzle’ என்ற டைட்டில் வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் செய்தி கசிந்தபோது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைத்தளத்தில் இந்த இரண்டு டைட்டிலும் இல்லை என்றும் தகுந்த நேரத்தில் வெங்கட் பிரபு அந்த மாஸ் டைட்டிலை அறிவிப்பார் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ளதாக தகவலின்படி விஜய்யின் 68வது படத்திற்கு 'G.O.A.T.' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த டைட்டில் தான் வரும் ஜனவரி 1ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு டைட்டில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்த டைட்டிலாவது வைக்கப்படுமா? அல்லது வேறு டைட்டிலை வெங்கட் பிரபு யோசித்து வைத்திருக்கிறாரா என்பதை புத்தாண்டு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.