close
Choose your channels

பாகுபலி படத்துடன் கனெக்சன் ஆனது தளபதியின் 'மெர்சல்'

Friday, July 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே வியாபாரமும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது
ஏற்கனவே இந்த படத்தின் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ரிலீஸ் உரிமை, ஆடியோ உரிமை ஆகியவை முடிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது பிரபல முன்னணி தொலைக்காட்சி நிறுவனம், இந்த படத்தின் சாட்டிலைட் உரிமைக்கு விலை பேசி வருகிறது.
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் கேரள ரிலீஸ் உரிமை குறித்த வியாபார தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கேரள ரிலீஸ் உரிமையை குளோபல் யூனிடெட் மீடியா நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளது. இந்த தகவலை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி அவர்கள் உறுதி செய்துள்ளார். இதே நிறுவனம்தான் கேரளாவில் 'பாகுபலி 2' படத்தை ரிலீஸ் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை போலவே கேரளாவிலும் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதால் இந்த படத்தின் கேரள வசூல் பிரம்மாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கேரளாவில் வெகுவிரைவில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளும் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.