close
Choose your channels

'தி கேரளா ஸ்டோரி' நடிகைக்கு திடீர் விபத்து.. என்ன ஆச்சு..?

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை திடீரென விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் இந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது என்பதும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதிலும் நீதிமன்றம் தடை விதிக்காததால் இந்த படம் வெளியானது என்பது தெரிந்ததே.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த படம் படம் கடும் எதிர்ப்பை சந்தித்தாலும் மற்ற மாநிலங்களில் இந்த படம் நல்ல வசூலை பெற்றதாக கூறப்பட்டது. இன்று காலை வெளியான தகவலின்படி உலகம் முழுவதும் இந்த படம் 100 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை அடா சர்மா உட்பட ‘தி கேரளா ஸ்டோரி’ படக்குழுவினர்களுடன் வட இந்தியாவில் பயணம் செய்த போது திடீரென அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாகவும் அதில் அடா சர்மா காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

இது குறித்து அடா சர்மா தனது சமூக வலைத்தளத்தில் ’நான் தற்போது நன்றாகத் தான் இருக்கிறேன், விபத்து குறித்து நிறைய மெசேஜ்கள் எனது செல்போனுக்கு வந்தன. எங்கள் படக்குழுவினர் அனைவரும் நன்றாக இருக்கிறோம், பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை, எங்களுக்கு நிகழ்ந்தது சிறிய விபத்து தான். என் மீது அக்கறை கொண்டு விசாரித்த அனைவருக்கும் எனது நன்றி’ என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.