close
Choose your channels

சிவகார்த்திகேயன் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் திட்டம்

Monday, January 14, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வேலைக்காரன்' படத்தை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்து வரும் படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வந்தார் என்பது தெரிந்ததே. சென்னை மற்றும் வெளிநாட்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக இயக்குனர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தின் டீசர் மற்றும் புரமோஷன் தகவல்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்படும் என்றும் இயக்குனர் ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.