close
Choose your channels

சத்யராஜ் நடிக்கும் அடுத்த படத்தில் திருமுருகன் காந்தி

Saturday, November 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் இன்று வெளியாகவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த டைட்டிலை சமூக போராளி திருமுருகன் காந்தி வெளியிட சம்மதம் தெரிவித்திருப்பதாக சற்றுமுன் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சஞ்சீவ் மீராசாஹிப் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் சத்யராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இந்த படத்திற்காக 'மீண்டும் வருகிறார் கட்டப்பா' என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலை இன்று மாலை 6 மணிக்கு திருமுருகன் காந்தி வெளியிடவுள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் பவர்புல் டைட்டிலாக இருக்கும் என்றும், இந்த படத்தின் குழுவினர்கள் புதிய இளைஞர்களாகவும், எனர்ஜி உள்ளவர்களாக இருப்பவர்கள் என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தீரன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'யாமிருக்க பயமே, காட்டேரி மற்றும் வீரா படங்களுக்கு இசையமைத்த பிரசாத இசையமைக்கவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.