close
Choose your channels

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த நடிகரா? ஹாட்ஸ்டார் அறிவிப்பு!

Wednesday, January 19, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவு பெற்றது என்பதும் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆக ராஜு தேர்வு செய்யப்பட்டார் என்பதும் இரண்டாவது இடத்தை பிரியங்கா பெற்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்காக பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி விரைவில் தொடங்கப் போவதாகவும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு, இதற்கான புரோமோ வீடியோ வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக வனிதா, பரணி, சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா வருணி, ஷாரிக், தாடி பாலாஜி, அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன

இந்த நிலையில் தற்போது ஹாட்ஸ்டார் தனது ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு போட்டியாளர் குறித்த மறைமுக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அந்த நிகழ்ச்சியில் கன்பெஃக்சன் ரூமுக்கு சென்றபோது ’நாமினேஷன் என்றால் என்ன? என்று கேட்டார். இந்த வசனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஹாட்ஸ்டார், கஞ்சா கருப்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை மறைமுகமாக உறுதி செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.