close
Choose your channels

எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. இந்த வார எவிக்சன் இவரா?

Friday, December 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறைந்த வாக்குகள் அடிப்படையில் எலிமினேஷன் செய்யப்படுவார் என்பது தெரிந்ததே. கடந்த வாரம் கூல் சுரேஷ் எலிமினேஷன் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம் சரவணன் ஆகிய மூன்று பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களில் ஆரம்பத்திலிருந்து விக்ரம் சரவணனுக்கு குறைந்த வாக்குகள் கிடைத்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி அவர் தான் வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் சரவணனுக்கு மாயா மற்றும் பூர்ணிமா செய்த அட்டூழியங்கள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலானதால் அவருக்கு பரிதாப வாக்குகள் குவியும் என்று அவர் இந்த வாரம் தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஓரளவு வாக்குகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த அளவு வாக்குகள் விக்ரம் சரவணன் கிடைக்கவில்லை என்பதால் அவர் தான் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் எனவே அவர் இந்த வாரம் வெளியேற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

டைட்டில் வின்னர் என்ற கனவுடன் வந்த விக்ரம் சரவணன் வெளியேற இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.