close
Choose your channels

கார் சேஸிங் த்ரில்லிங் காட்சி .. ட்ரோன் கேமராவில் படப்பிடிப்பு.. த்ரிஷா வெளியிட்ட வைரல் வீடியோ ..!

Saturday, December 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார் சேஸிங் காட்சியில் நடிகை த்ரிஷா நடித்துள்ள வீடியோ அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை த்ரிஷா மீண்டும் பிஸியாகிவிட்டார் என்பதும் விஜய்யுடன் அவர் நடித்த ‘லியோ’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அஜித்துடன் ’விடாமுயற்சி’ கமல்ஹாசன் உடன் ’தக்லைப்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் ‘ஐடெண்டிட்டி’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார். நிவின் பாலி ஹீரோவாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் அவர் சில நாட்களாக கலந்து கொண்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் த்ரிஷா, கார் சேஸிங் காட்சியில் நடிப்பது போன்றும் அந்த காட்சியை ட்ரோன் கேமரா மூலம் படமாக்குவது போன்ற காட்சிகள் உள்ளன.

நிவின்பாலி, த்ரிஷா, வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.