close
Choose your channels

த்ரிஷாவின் 'நாயகி' ரிலீஸ் தேதி

Friday, May 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் முன்னணி நாயகியாக இருந்து வரும் த்ரிஷா இன்றைய இளம் நடிகைகளுக்கு இணையாக வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் 'நாயகி' என்ற த்ரில் படத்தில் வித்தியாசமான இரண்டு கெட்டப்புகளில் நடித்து வந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இந்த படம் வரும் ஜூன் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. த்ரிஷாவின் மேனேஜர் கிரிதர் தயாரித்துள்ள இந்த படத்தை கோவி இயக்கியுள்ளார். த்ரிஷா, கணேஷ் வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.