close
Choose your channels

த்ரிஷா வெளியிட்ட 'தலைமை செயலகம்' வீடியோ..பரபரப்பான அரசியல் களம்..!

Thursday, May 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் ’தலைமைச் செயலகம்’ என்ற பரபரப்பான அரசியல் களம் கொண்ட வெப் தொடரின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்தபாலன் இயக்கத்தில் ஜீ தமிழ் சேனலில் மே 17ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் வெப் தொடர் ’தலைமைச் செயலகம்’. கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த வெப் தொடரை வசந்த பாலன் எழுதி இயக்கி உள்ளார்

ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த முன்னோட்ட வீடியோவை நடிகை த்ரிஷா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ‘யார் வெல்வார் யார் கொல்வார்’ என்ற டைட்டில் வெளியாகி உள்ள இந்த ’தலைமைச் செயலகம்’ முன்னோட்ட வீடியோவில் பின்னணியில் ஒலிக்க்கும் வசனம் பின்வருமாறு:

நீதி என்றால் என்ன என்று தெரியுமா? செஞ்ச தப்புக்கு தண்டனை வாங்கி தர்றதா? இல்ல தப்பே செய்யக்கூடாதுங்கிற பயத்தை ஏற்படுத்துறதா, எதுவாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவங்களுக்கு பக்கம் நிக்கிறது தான் நீதி, அந்த நீதி கிடைப்பதற்காக சில குற்றங்களை செய்ய வேண்டி இருக்கும், அந்த குற்றங்களுக்கு தண்டனை கூட கிடைக்கலாம், அதன் முடிவு மரணமாக கூட இருக்கலாம், எல்லாத்தையும் தாண்டி, தன்னையும் தாண்டி ஒரு தலைவன் தன் மக்கள் மீது வைத்திருக்கும் காதல் தான் நீதி’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.