close
Choose your channels

லெஜண்ட்களுடன் ஒரு புகைப்படம்.. நாய்க்குட்டியுடன் ஒரு கொஞ்சல்.. த்ரிஷாவின் லேட்டஸ்ட் பதிவுகள்..!

Friday, March 22, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை த்ரிஷா 2 லெஜண்ட்களுடன் எடுத்த புகைப்படத்தையும், பிரபலம் ஒருவரது வீட்டில் உள்ள நாய்க்குட்டியுடன் கொஞ்சம் வீடியோவையும் வெளியிட்டுள்ள நிலையில் இவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாயகி ஆக நடித்து வரும் த்ரிஷா தற்போது கமல்ஹாசன், அஜித், மோகன்லால், சிரஞ்சீவி, நிவின் பாலி உள்ளிட்ட பல பிரபலங்களுடன் தென்னிந்திய மொழிகளில் பிஸியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை த்ரிஷா, சிரஞ்சீவி நடித்து வரும் ’விசுவாம்பரா’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அவர் படப்பிடிப்பு தளத்தில் இரண்டு லெஜெண்டுகளான சிரஞ்சீவி மற்றும் எம்எம் கீரவாணி ஆகியோர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் வீட்டிற்கு சென்ற நிலையில் அங்கு அவர் வளர்க்கும் ஒரு நாய்க்குட்டியை கொஞ்சும் வீடியோவையும் இணையத்தில் பதிவு செய்துள்ளார். லெஜெண்டுகளுடன் எடுத்த புகைப்படம் மற்றும் நாய்க்குட்டியுடன் கொஞ்சும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

மேலும் இந்த பதிவுகளுக்கு த்ரிஷாவிற்கு வயதே ஆகாதா? என்று கமெண்ட் பதிவு செய்துள்ள ரசிகர்கள் அவர் ஜீன்ஸ் -ஷர்ட்டில் எளிமையாக காணப்படுகிறார் என்றும் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.