close
Choose your channels

டிடிவி தினகரன் வெளியிடும் திரைப்படத்தின் டீசர்!

Monday, April 15, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவிருப்பதை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளனர். நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடையும் இந்த நேரத்திலும் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஒரு திரைப்படத்தின் டீசரை வெளியிட ஒப்புக்கொண்டுள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிடுவது 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற படத்தின் மூன்றாவது டீசரைத்தான். இந்த படத்தின் டீசரை டிடிவி தினகரன் நாளை காலை 9 மணிக்கு வெளியிடவுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் இரண்டு டீசர்கள் வெளியாகியுள்ளது என்பதும் இரண்டாவது டீசர் சமீபத்தில் வெளியானபோது அதனை நடிகர் கமல்ஹாசன் பாராட்டினார் என்பது தெரிந்ததே.

அமீர், முத்துகோபால், சாந்தினி, ஜெயபிரகாஷ், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு வவுரிகுமார் இசையமைத்துள்ளார். அமீர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை முத்துகோபால் இயக்கியுள்ளார்,

இதே டைட்டில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய திரைப்படம் ஒன்று கடந்த 1984ஆம் ஆண்டு வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.