close
Choose your channels

'DD3' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்.. வேற லெவலில் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் தனுஷ்..!

Saturday, December 23, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது திரைப்படமான ’DD3’ திரைப்படத்தில் ஏற்கனவே சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என திரையுலகில் பல்வேறு அவதாரங்கள் எடுத்த தனுஷ் ’பா பாண்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனரானார் என்பதும் அந்த படத்தின் வெற்றியை அடுத்து சமீபத்தில் அவர் ’D50’ என்ற படத்தை இயக்கிய முடித்து உள்ளார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகனாக தனுஷின் நெருங்கிய உறவினர் ஷரவண்குமார் நடிக்க அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சரத்குமார் நடிக்க இருப்பதாகவும் தனுஷும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் மேத்யூ தாமஸ் மற்றும் பிரியா வாரியர் ஆகிய இருவரும் இணைந்துள்ளதாக சர்ப்ரைஸ் தகவல் வெளியாகி உள்ளது. பிரபல மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஏற்கனவே விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார் என்பதும், அதேபோல் ப்ரியா வாரியர் ‘ஒரு அடார் லவ்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷின் வித்தியாசமான நட்சத்திர தேர்வு இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளைய போஸ்டருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.