close
Choose your channels

அஜித்தின் 'விவேகம்' ரிலீஸ் தேதி இந்த இரண்டில் ஒன்றுதான்

Tuesday, February 28, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் அஜித் உள்பட 'விவேகம்' படக்குழுவினர் மீண்டும் பல்கேரியாவுக்கு படப்பிடிப்புக்காக செல்லவுள்ளனர். இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி அல்லது அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளிவர வாய்ப்புள்ளது. மேலும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 10 அல்லது ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த படம் வெளிவருவது உறுதி என்றும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வரும் இந்த படத்தில் அக்சராஹாசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். சிறுத்தை சிவாவின் பிரமாண்டமான இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.