கோவாவில் வனிதா-பீட்டர்பால்; வைரலாகும் ரொமான்ஸ் புகைப்படங்கள்!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகை வனிதாவால் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டது என்பதும் குறிப்பாக பீட்டரின் முதல் மனைவி மற்றும் சூரியா தேவி ஆகியோர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டது என்பதும் இந்த பிரச்சனை காவல்துறை வரை சென்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது வனிதாவின் பிரச்சனை சமூக வலைதளங்களில் அடங்கி உள்ள நிலையில் வனிதா தனது திருமண வாழ்க்கையைக் கொண்டாட ஆரம்பித்துள்ளார். கொரோனா வைரஸ் ஊரடங்கில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வனிதா தனது கணவர் மற்றும் மகள்களுடன் கோவா சென்று உள்ளார்.
கோவாவுக்கு காரிலேயே சென்ற அவர்கள் காரில் இருந்தவாறே செல்பி உள்பட பல்வேறு புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர் என்பதும் இந்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது கோவாவில் தற்போது பீட்டர் பாலுடன் ரொமான்ஸ் மூடில் இருக்கும் வனிதாவின் ரொமான்ஸ் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு அவை வைரல் ஆகி வருகின்றன. சமீபத்தில் காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கோவா சென்ற நிலையில் அதனை அடுத்து தற்போது வனிதா தனது கணவர் மற்றும் மகள்களுடன் கோவா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.