close
Choose your channels

ஜோக்கர் இயக்குனரை பாராட்டிய பிரபல அரசியல்வாதி

Tuesday, August 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'குக்கூ' இயக்குனர் ராஜமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி அனைத்து ஊடகங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தை பார்த்த ரசிகர்களும், சமூக வலைத்தளங்களில் இயக்குனர் ராஜூமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திரைப்படங்களை மிகவும் அரிதாக பார்க்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று இந்த படத்தை பார்த்து இயக்குனர் ராஜூமுருகனுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சமகால அரசியலையும், அரசியல்வாதிகளையும் நையாண்டி செய்துள்ள 'ஜோக்கர்' திரைப்படத்திற்கு ஒரு அரசியல்வாதியே பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.