close
Choose your channels

ZEE5 தளத்தில் சாதனை செய்த வெற்றிமாறனின் 'விடுதலை'..!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிப்பில்”விடுதலை பாகம் 1” திரைப்படம் ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது

RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், சூரி நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில், நடித்த “விடுதலை பாகம் 1” திரைப்படம், சமீபத்தில் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் தமிழ் திரை வரலாற்றில் முத்திரை பதித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஏப்ரல் 28, 2023, ZEE5 தளத்தில் டிஜிட்டல் பிரீமியராக வெளியான இப்படம் பார்வையாளர்களிடம் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ் சினிமா ரசிகனின் ரசனையை உயர்த்துவதுடன், தமிழ் சினிமாவின் தரத்தை உலக அளவில் நிலை நிறுத்துபவர்களில் முக்கியமானவர் இயக்குநர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது புதிய திரைப்படமான 'விடுதலை பாகம் 1' சமூகத்திற்கு அவசியமான படைப்பாகவும், ரசிகர்கள் கொண்டாடும் படைப்பாகவும் அமைந்துள்ளது.

இதுவரையிலும் காமெடியில் கலக்கி வந்த நடிகர் சூரி முதல் முறையாக, மாறுபட்ட தோற்றத்தில் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். திரை வாழ்வின் முக்கியமான பாத்திரத்தில், வாத்தியாராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். திரையரங்குகளில் ரசிகர்கள் காணாத பல காட்சிகளுடன் இயக்குநரின் முழுமையான பார்வையில் அன்கட் வெர்ஷனாக இப்படம் ZEE5 தளத்தில் வெளியாகியுள்ளது. வெளியான குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

2023 ஆம் ஆண்டு கடந்த ஆண்டைப் போலவே தளத்திற்கு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்து வருகிறது, இந்த வருடம் சிறந்த ஒரிஜினல் தொடர்கள், திரைப்படங்கள், பிளாக்பஸ்டர் படங்கள், சிறந்த பொழுதுபோக்கு மற்றும் விமர்சன ரீதியிலும் பாராட்டப்பட்ட பல அட்டகாசமான திரைப்படங்களை ZEE5 வழங்கி வருகிறது. ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான அயலி, செங்களம், ஒரு கோடை மர்டர் மிஸ்டரி மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் திரைப்படம் என அனைத்து வெளியீடுகளும் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று, வெற்றி பெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது விடுதலை பாகம் 1 திரைப்படம் இணைந்துள்ளது.

எண்ணற்ற வெற்றி படைப்புகளை கொண்டிருக்கும் ZEE5 தளம் புத்தம் புதிய திரைப்படங்கள் மற்றும் புதிய வெப் சீரிஸ்களுடன் கூடிய தனது அடுத்த கட்ட படைப்புகளை விரைவில் அறிவிக்க உள்ளது. ZEE5 உடன் இணைந்திருங்கள் கோடையை கொண்டாடுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos