close
Choose your channels

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண தேதி இதுவா? எங்கே நடக்கப்போகுது தெரியுமா?

Saturday, May 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதை நயன்தாராவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது திருமண தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது

விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் சமீபத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் அனேகமாக இந்த திருமணம் திருப்பதியில் அல்லது கேரளாவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படமான ‘அஜித் 62’ படத்தை இயக்கவுள்ள விக்னேஷ் சிவன், அந்த படத்தின் பணிகளை விரைவில் தொடங்குவார் என்றும், திருமணத்திற்கு பின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.