close
Choose your channels

தோனிக்கே பாதுகாப்பு அதிகாரியாக இருந்த விக்னேஷ் சிவன் அம்மா: ஆச்சரிய புகைப்படம்!

Tuesday, February 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு தோனி மற்றும் சிஎஸ்கே அணி வந்திருந்தபோது சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பாதுகாப்பு அதிகாரியாக இயக்குனர் விக்னேஷ் சிவனின் அம்மா தான் இருந்தார் என்பது குறித்த புகைப்படம் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தல தோனியை இயக்குனர் விக்னேஷ் சிவன் சந்தித்தார் என்பதும் சிஎஸ்கே அணிக்காக எடுக்கப்பட உள்ள விளம்பர படத்தை அவர் தான் இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க சிஎஸ்கே அணி சென்னை வந்தபோது அந்த அணியின் பாதுகாப்புக்கு தனது அம்மாதான் இன்சார்ஜாக இருந்தார் என்றும் அப்போது அவர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்ததால் அது சாத்தியமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பின்னர் தனது அம்மா தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் அதனை தான் வெகு தூரத்தில் இருந்தபடியே தோனியை ரசித்து பார்த்ததாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் தோனியுடன் தனது அம்மா போலீஸ் உடையில் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் தோனியிடம் இருந்து தலைமைப் பண்பை கற்றுக் கொண்டதாகவும் அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஏங்கி இருந்ததாகவும் ஆனால் அப்போது வாய்ப்புகள் அமையவில்லை என்றும் தற்போது அவர் நடிக்கும் விளம்பர படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை அடுத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். விடா முயற்சி செய்து உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும் என்பதற்கு தோனி ஒருவரே சிறந்த உதாரணம் என்றும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ள தருணங்களை வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது என்றும் விக்னேஷ் சிவன் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.