close
Choose your channels

இந்த வாரம் திரையரங்கில் ரெண்டே படம் தான்.. ரெண்டுமே மாஸ் ஆக இருக்குமா?

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் தமிழில் திரையரங்குகளில் குறைந்தது நான்கு படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் இரண்டு படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இரண்டு படங்களுமே மாஸ் ஆக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நடித்து இயக்கிய ’பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. ஏற்கனவே ’பிச்சைக்காரன்’ முதல் பாகம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது ஏழு ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனி, காவியா தாபார், ராதாரவி, ஒய் ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஹரிஷ் பெராடி, ஜான்விஜய், யோகி பாபு உட்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை இயக்கி இசையமைத்து படத்தொகுப்பு செய்துள்ளதோடு இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் விஜய் சேதுபதி நடித்த நீண்ட காலதாமதம் ஆன படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. மேகா ஆகாஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் மகிழ் திருமேனி, மோகன் ராஜா ஆகிய இரண்டு இயக்குனர்கள் முக்கிய இடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.