close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி-நேரம்

Saturday, September 17, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' சமீபத்தில் வெளியாகி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' படத்திற்கு மூன்று மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவு பகலாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீசர் வரும் திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு மிகவிரைவில் வெளியாகவுள்ளதாகவும், இந்த படத்தை தீபாவளி தினத்தில் திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 'சைத்தான்' படம் தீபாவளிக்கு திரையிடப்படுவது உறுதியானால், விஜய் ஆண்டனியின் முதல் தீபாவளி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.;
விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், ஒய்.ஜி.மகேந்திரா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இந்த படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.