close
Choose your channels

'வாத்தி' படத்திற்கு விறுவிறுப்பாக டிக்கெட் புக் செய்யும் விஜய் ரசிகர்கள்: காரணம் இதுதான்..!

Thursday, February 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த 'வாத்தி’ திரைப்படம் நாளை தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் பிரம்மாண்டமான புரமோஷன் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 'வாத்தி’ படத்தின் இடைவேளையில் விஜய் நடித்துவரும் 'லியோ’ படத்தின் டைட்டில் வீடியோ வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விஜய் ரசிகர்களும் 'வாத்தி’ படத்திற்கு டிக்கெட் கடை புக் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியான ’லியோ’ படத்தின் டைட்டில் வீடியோ இரண்டு நிமிடங்களுக்கு மேல் இருந்தது என்பது அட்டகாசமாக இருந்த இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சென்சார் செய்யப்பட்டு பெரிய திரையிலும் வெளியாக உள்ளது என்பதும் அதுவும் 'வாத்தி’ திரைப்படத்தின் இடைவேளையில் வெளியாக இருப்பதை எடுத்து விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் இந்த டைட்டில் டீசரை பெரிய திரையில் பார்க்க காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ், சம்யுக்தா ஹெக்டே, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.