close
Choose your channels

'வாரிசு' டிரைலர் புத்தாண்டில் இல்லையா? விஜய் ரசிகர்கள் அதிருப்தி!

Saturday, December 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக இருக்கும் நிலையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு அல்லது நாளை புத்தாண்டு தினத்தில் விஜய் நடித்த 'வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் 'வாரிசு’ படக்குழுவினர்களிடம் இருந்து வந்த தகவலின் படி புத்தாண்டு தினத்தில் கண்டிப்பாக 'வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்திருக்கும் தகவலின்படி புத்தாண்டு தினத்தில் 'வாரிசு’ டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ஜனவரி இரண்டாம் தேதி தான் 'வாரிசு’ படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 'வாரிசு’ ட்ரைலர் கொண்டாட்டத்தையும் நடத்த விஜய் ரசிகர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும், ஜனவரி இரண்டாம் தேதி 'வாரிசு’ கொண்டாட்டம் நிச்சயம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும் 'வாரிசு’ திரைப் படத்தை சென்சாருக்கு அனுப்பி உள்ளதாகவும் சென்சார் சான்றிதழ் இன்னும் ஓரிரு நாளில் வந்து விடும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் வரும் பொங்கல் தினத்தில் விஜய்யின் 'வாரிசு’ மற்றும் அஜித்தின் 'துணிவு’ ஆகிய இரண்டு பெரிய படங்கள் வர உள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.