close
Choose your channels

ரஜினிக்கு நிகரானவர் அஜித்தா? விஜய்யா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி

Saturday, February 15, 2020 • தமிழ் Comments

கடந்த சில நாட்களாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வருமான வரித்துறை சலுகை செய்துள்ளதாகவும், அதே நேரத்தில் தளபதி விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய் அரசியலுக்கு வந்து, ரஜினிக்கு நெருக்கடி கொடுப்பார் என்ற எண்ணத்தில்தான் வருமான வரித்துறையினர் மூலம் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாக திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி "விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை என்றும் அதனால் ரஜினியுடன் அவரை ஒப்பிட வேண்டிய அவசியம் இல்லை" என்றும் கூறினார். 

அதுமட்டுமின்றி ரஜினிக்கு நிகரானவர் அஜீத் தான் என்றும் ரஜினி மலை என்றால் அஜித் தல என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இந்த பேட்டி குறித்து ரஜினி, அஜித், விஜய் ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz