close
Choose your channels

சிவாஜி புரடொக்ஷன்ஸ் அடுத்த படத்தில் விஜய்-விக்ரம்பிரபு

Friday, June 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 'சிவாஜி புரடொக்ஷன்ஸ்' நிறுவனம் ரஜினியின் 'மன்னன்', கமலின் 'வெற்றி விழா', அஜித்தின் 'அசல்' உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த இந்த நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு படத்தை அட்லி அல்லது 'ஜில்லா' நெல்சன் இயக்கும் 'விஜய் 61' படம் என்றும் இன்னொரு படம் புதுமுக இயக்குனர் அசோக் இயக்கும் விக்ரம் பிரபு நடிக்கும் படம் என்றும் கூறப்படுகிறது.

சிவாஜி குடும்பத்தின் வாரீசாக இருந்தபோதிலும் சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் விக்ரம்பிரபு தற்போது தான் முதல்முறையாக நடிக்கின்றார். அதேபோல் இளையதளபதி விஜய் நடிக்கும் படத்தை சிவாஜி புரடொக்ஷன்ஸ் தயாரிப்பதும் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.