close
Choose your channels

விஜய்சேதுபதியின் முக்கிய படத்தின் உரிமையை பெற்ற விஜய் டிவி.. விரைவில் ரிலீஸ்..!

Wednesday, April 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு நடிகருக்கும் 50வது படம் முக்கியமானது என்ற நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாக சற்றுமுன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களின் ஒருவரான விஜய் சேதுபதியின் 50வது படம் 'மகாராஜா’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

விஜய் சேதுபதியுடன் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் அஜனீஷ் லோக்நாத் இசையில், தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் பிசினஸ் ஆரம்பித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் கட்டமாக ’மகாராஜா’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அடுத்தடுத்த பிசினஸ் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.