close
Choose your channels

விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் இதுவா? மாஸ் டைட்டில் என ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Monday, February 27, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் மாஸ் டைட்டில் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் பிசியான நடிகராக உலா வருகிறார் என்பது தெரிந்ததே. அவர் தற்போது ஷாருக்கான் உடன் ’ஜவான்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் திரைப்படத்தை நிதிலன் சுவாமிநாதன் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே பாரதிராஜா நடித்த ’குரங்கு பொம்மை’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி, நட்டி நாட்ராஜ், முனிஸ் காந்த், அருள் தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அதிரடி ஆக்சன் படமான இந்த படத்திற்கு ’மகாராஜா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றும் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும் என்றும் இயக்குனர் நிதிலன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படத்திலும், கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் விரைவில் இந்த படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.