close
Choose your channels

பாவாடை தாவணியில் அழகு தேவதை.. விஜய் சேதுபதி மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்..!

Wednesday, August 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில், அதில் விஜய் சேதுபதியின் மகள் பாவாடை தாவணியில் அழகு தேவதையாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் கடந்த 2003ஆம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சூர்யா என்ற மகனும் ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் விஜய் சேதுபதியும் ஓணம் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில் மகன், மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் அவரது மகன் சூர்யா வேஷ்டி சட்டையில் இருக்க அவரது மகள் ஸ்ரீஜா பாவாடை தாவணியில் உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதியின் மகள் கொள்ளை அழகுடன் இருப்பதாகவும் அவருடைய குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.