close
Choose your channels

ரீரிலீஸ் பட்டியலில் விஜய் சேதுபதியின் 2 சூப்பர் ஹிட் படங்கள்.. ரசிகர்கள் ரெடியா?

Saturday, April 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களாக சூப்பர் ஹிட் ஆன பழைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக விஜய் நடித்த ’கில்லி’ திரைப்படம் புதிய திரைப்படங்களுக்கு இணையான வசூலை பெற்று சாதனை செய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

மேலும் வரும் மே 1ஆம் தேதி அஜித் நடித்த ’பில்லா’ மற்றும் ’தீனா’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாகவும் அதனை தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆன சில படங்கள் ரீரிலீஸ் செய்வதற்கு தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி ரீரிலீஸ் பட்டியலில் இரண்டு விஜய் சேதுபதி படங்கள் இருப்பதாக தெரிகிறது. அவை கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவான ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான விஜய் சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவான ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்கள் ரீரிலீஸ் செய்ய இருப்பதாகவும் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய், அஜித் ஆகிய இருதரப்பு ரசிகர்களும் ரீரிலீஸ் படங்களை கொண்டாடி வரும் நிலையில் அடுத்த கட்டமாக விஜய் சேதுபதி ரசிகர்களும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள தயாராகி விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.