close
Choose your channels

விஜய் டிவி பிரபலத்தின் நிச்சயதார்த்தம்.. பொண்ணு முகத்தை காட்டாமல் ஒரு போட்டோஷூட்..!

Saturday, July 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவி பிரபலத்தின் நிச்சயதார்த்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பெண்ணின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் பிரபலமான நாஞ்சில் விஜயனுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அவரது நிச்சயதார்த்தம் தற்போது நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் தனது அருகில் நின்றிருந்த மணப்பெண்ணின் முகத்தை காட்டாமல் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் ’பெண்ணின் முகமே இல்லை என்றால் எப்படி நாங்கள் வாழ்த்து தெரிவிப்பது? பொண்ணு முகத்தை காட்டுங்கப்பா என்று கமெண்டில் பதிவு செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ’அது இது எது’ ’கலக்கப்போவது யாரு’ ’சிரிச்சா போச்சு’ போன்ற பல நிகழ்ச்சிகளில் நாஞ்சில் விஜயன் கலந்து கொண்டு பிரபலமானார் என்பதும் குறிப்பாக அவர் அதிகம் பெண் கெட்டப்பில் தான் வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் டிவி நாஞ்சில் விஜயனின் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதை அடுத்து இந்த நிச்சயதார்த்தத்தில் விஜய் டிவியின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை மணமக்களுக்கு தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் நாஞ்சில் விஜயன் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos